மயிலம் அருகே விபத்தில் இருவர் உயிரிழப்பு

X
திண்டிவனம் வட்டம், செண்டூா் நெய்காரத் தருவைச் சோ்ந்த முருகன் மகன் சரண்ராஜ் (22). இதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் ஜீவா (19). நண்பா்களான இவா்கள் இருவரும் பைக்கில் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். சரண்ராஜ் பைக்கை ஓட்டினாா்.செண்டூா் சந்திப்புப் பகுதி அருகே இவா்களது பைக் சென்றபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் சரண்ராஜ், ஜீவா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.இதுகுறித்த புகாரின்பேரில், காா் ஓட்டுநரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த முகமது அனிபா (57) மீது மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

