ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை கொண்டை ஊசி வளைவில் தடுப்புச்சுவரை உடைத்து மரத்தின் மீது மோதி நின்ற சுற்றுலா வேன் சுற்றுலா பயணிகள் உயிர் தப்பினர் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலா தளமான ஏலகிரி மலைக்கு திருப்பத்துார் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள்,பண்டிகை காலங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறையால் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதற்கிடையே வேலுார் தொரப்பாடியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் சுற்றுலா வேனில் ஏலகிரி மலைக்கு வந்தனர். சுற்றுலா வேனை வேலுாரை சேர்ந்த நசீர்(47). என்பவர் ஓட்டி வந்தார்.தொடர்ந்து ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து கண்டு கழித்த அவர்கள் இரவு மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர். அப்போது 4வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வளைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தடுப்புச்சுவரை உடைத்து மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் 14 பேர் அதிர்ஷ்டசமாக அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர். தகவலறிந்த ஏலகிரி மலை போலீசார் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story



