ஏலகிரி மலையில் பாரம்பரியம் மாறாத பொங்கல் விழா! சேவாட்டம் ஆடி பொதுமக்கள் கொண்டாட்டம்*
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பாரம்பரியம் மாறாத பொங்கல் விழா! சேவாட்டம் ஆடி பொதுமக்கள் கொண்டாட்டம்* திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கியது. ஏலகிரிமலையில், மலை வாழ் மக்கள் விவசாயத்தையும், சுய தொழிலையும் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கலையோட்டி அவரவர் பராமரித்து வரும் கால்நடைகளை குளிப்பாட்டி அலங்கரித்து பி்ன்னர் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் குடும்பத்திற்கு ஒரு பொங்கல் வைத்து பெரிய வாழை இலை போட்டு பொங்கலை ஒன்றாக படையலிட்டு கால்நடைகளுக்கு பூஜை செய்வது வழக்கம் இந்த நிலையில் நிலாவூர் கிராமத்தில் உள்ள மாடுகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து ஒரே இடத்தில் பட்டியில் அடைத்து பின்னர் காவல் தெய்வாமாக விளங்க கூடிய கதவு நாசியம்மனுக்கு பொங்கல் படையில் வைத்து மேல தாளங்களுடன் பூஜை செய்து மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தனர். பின்னர் இரவு முழுவதும் ஊர் பொதுமக்கள் சேவாட்டம் ஆடி மகிழ்ந்தனர். அதன்பின்னர் உறவினர்கள் மற்றும் வெளியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ச்சியடைந்தனர். அதன்பிறகு மலைவாழ் மக்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்…
Next Story



