ஹிந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

X
கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் மாவட்ட பொதுக்குழுக்கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி பாரத மாதா நுாலகத்தில் நடந்தமாவட்ட பொதுக்குழுக்கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு ஹிந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முத்தையன், மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ஐயப்பன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். ஹிந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
Next Story

