ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு கலெக்டர், எஸ்.பி., ஆலோசனை

ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு கலெக்டர், எஸ்.பி., ஆலோசனை
X
பாதுகாப்பு ஏற்பாடு கலெக்டர், எஸ்.பி., ஆலோசனை
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எஸ்.பி., சரவணன், டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் முன்னிலை வகித்தனர்.இதில், விழுப்புரம் மாவட்டத்தில், நாளை (௧௮மதேதி) ஆற்றுத்திருவிழா நடைபெறும் சின்னக்கள்ளிப்பட்டு, பிடாகம், பில்லூர், அகரம், சித்தாமூர், அய்யூர் அகரம், அரகண்டநல்லுார், வீடூர், விக்கிரவாண்டி, குயிலாப் பாளையம் உள்ளிட்ட இடங்களில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.திருவிழா நடைபெறும் இடங்களில் போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பஸ் வசதி உள்ளிட்டவை குறித்து, கலெக்டர் கேட்டறிந்தார்.கூட்டத்தில், விழுப்புரம் கோட்டாட்சியர் முருகேசன், தாசில்தார் கனிமொழி மற்றும் காவல்துறை, வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story