அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

X
விருதுநகரில் அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பயில்வான் சந்தோஷ் குமார் தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. தமிழகம் முழுவதும் எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் கருமாதிமடம் பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் முழு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் பயில்வான் சந்தோஷ்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் ஒன்றியம் நகரம் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆரின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
Next Story

