பரமத்திவேலூர் அருகே எருமை மாட்டிற்கு விஷம் வைத்த மர்ம நபர்கள்.

பரமத்திவேலூர் அருகே எருமை மாட்டிற்கு விஷம் வைத்த மர்ம நபர்கள்.
X
பரமத்திவேலூர் அருகே எருமை மாட்டிற்கு விஷம் வைத்த மர்ம நபர்கள்.போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், ஜன. 17: நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டி, குமார பாளையம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் மகன் சக்திவேல் (32), இவர் 30 எருமை மாடுகளைவைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் பாலப்பட்டி அருகே காவிரி கரையோர பகுதியான, கூடுதுறை ஆற்றங்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு சென்று விட்டார். மாலை மாடுகளை வீட்டிற்கு ஓட்டிச்செல்ல வந்த போது ஒரு எருமை மாடு இறந்து கிடந்தது. அதன் அருகில் விஷம் கலந்த தண்ணீர் பாத்திரம் இருந்தது. மேலும் அதில்கலக்கப்பட்ட விஷ மருந்து காலியான பாட்டில் அருகே கிடந்துள்ளது. சக்திவேலை பார்த்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து ப.வேலூர் போலீசில் புகார் கொடுத்தனர். புகார் கொடுத்ததின் பேரில் எருமை மாட்டிற்கு விஷம் வைத்த மர்ம நபர்களை போலீ சார் தேடி வருகின்றனர்.
Next Story