வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி மீது டூவீலர் மோதி பலி.

வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி மீது டூவீலர் மோதி பலி.
X
வேலகவுண்டம்பட்டி அருகே விவசாயி மீது டூவீலர் மோதி பலி. போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், ஜன. 17: நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (75). இவர் கடந்த 14-ஆம் தேதி இரவு வேலகவுண்டம்பட்டி அருகே காதப்பள்ளி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் செல்லப்பம்பட்டி அருகே குள்ளப்ப நாயக்கனூர் பகுதியை சேர்ந்த நாகமலை (67) என்பவர் தனது மனைவி சரோஜாவுடன் டூவீலரில் வந்தார். அப்போது டூவீலர் மோதியதில்நிலை தடுமாறி திருப்பதி கீழே விழுந்தார். டூவீலரில் வந்த நாகமணி அவரது மனைவி சரோஜாவும் கீழே விழுந்தனர். திருப்பதியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரது குடும்பத் தினர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர். ஆனால் திருப்பதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட் டதால் மீண்டும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திருப்பதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story