சமத்துவ பொங்கல் விழா மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

சமத்துவ பொங்கல் விழா மற்றும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா
X
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க உறுப்பினர் அட்டை வழங்கும் விழா சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க உறுப்பினர் அட்டை வழங்கும் விழா சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது பஞ்சாலை சண்முகம் இந்நிகழ்விற்கு தலைமையேற்றார் இயக்க மாவட்ட செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் தோழர் லி. உதயகுமார் தோழர் அன்புமணி சிபிஐ மாவட்ட செயலாளர் ஆகிய தலைவர்கள் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்கள் ஏ ஐ டி யு சி மாவட்ட பொது செயலாளர் தோழர் தனசேகரன் மாவட்ட தலைவர் ஜெயராமன் சிபிஐ சுகுமார் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் குமாரபாளையம் நகர மன்ற உறுப்பினர் சியாமளா செந்தில்குமார் திமுக நகர பொறுப்பு குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் சர்க்கரைப் பொங்கல் வழங்கி விழாவினை சிறப்பித்தார்கள் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் தலைவர் விடியல் ஆர் பிரகாஷ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங்கினார் பொங்கல் விழாவின் சிறப்புகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடி வருவதையும் திமுகழக பொறுப்புக்குழு உறுப்பினர் திரு செந்தில் குமார் அவர்கள் எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றினார் திரு ராம்கி நகர பொருளாளர் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நடைபெற்றது
Next Story