சிவகிரி பகுதியில் இன்று மின்தடை
Sankarankoil King 24x7 |18 Jan 2025 1:20 AM GMT
சிவகிரி பகுதியில் இன்று மின்தடை
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி வட்டார பகுதிகளில் இன்று சனிக்கிழமை (ஜன.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி உபமின் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சி வகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
Next Story