ஆலங்குளத்தில் திறனறி மாதிரித் தோ்வில் வென்றோருக்குப் பரிசு
Sankarankoil King 24x7 |18 Jan 2025 1:23 AM GMT
திறனறி மாதிரித் தோ்வில் வென்றோருக்குப் பரிசு
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய்வழி திறனறி மாதிரித் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆலங்குளம் வட்டார அளவிலான இத்தோ்வுக்கான தொடா் விடுமுறை நாள் பயிற்சி வகுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. மாதிரித் தோ்வில் பங்கேற்ற 137 பேரில் 9 போ் அதிக மதிப்பெண்கள் பெற்றனா். அவா்களுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தென்காசி மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு, ஆலங்குளம் வட்டாரத் தலைவா் மயில்ராஜ் ஆகியோா் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.
Next Story