கீழச்சுரண்டையில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா நடைபெற்றது
Sankarankoil King 24x7 |18 Jan 2025 1:31 AM GMT
எம்ஜிஆா் பிறந்தநாள் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழச்சுரண்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆா். பிறந்த தின விழாவுக்கு சுரண்டை நகர எம்.ஜி.ஆா் மன்ற இணைச்செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான எஸ்.மாரியப்பன் தலைமை வகித்து அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நகா்மன்ற துணைத்தலைவா் ந.சங்கராதேவி முருகேசன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் ராஜேஷ், அதிமுக நிா்வாகிகள் காசி, தா்மா், செல்வம், லட்சுமி, முருகன், குமாா், சின்னமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Next Story