குற்றாலம், இலஞ்சியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா நடைபெற்றது

குற்றாலம், இலஞ்சியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா நடைபெற்றது
இலஞ்சியில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி பழையபேருந்துநிலையம் பகுதியில் நகரச் செயலா் சுடலை தலைமையிலும், குற்றாலத்தில் பேரூா் செயலா் எம். கணேஷ் தாமோதரன் தலைமையிலும், இலஞ்சியில் எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் காத்தவராயன் தலைமையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்துகொண்டு, எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் கட்சிக் கொடியேற்றி,இனிப்புகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், முன்னாள் எம்எல்ஏ பி.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Next Story