உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர்தின விழா

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர்தின விழா
X
சிவகங்கையில் தமிழவையம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர்தின விழா நடைபெற்றது.
சிவகங்கையில் தமிழவையம், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர்தின விழா நடைபெற்றது. தமிழாசிரியர் பகிரதநாச்சியப்பன் தலைமை வகித்தார். மன்னர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் வரவேற்றார். மூத்த வழக்கறிஞர் ராம்பிரபாகர், தமிழவைய நிர்வாகிகள் வித்யாகணபதி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார், அய்யன் திருவள்ளுவர் தமிழோசை மன்ற நிறுவனர் அர்ஜூனன், முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் நாகராஜன் ஆகியோர் பேசினர். ஆசிரியர் காளிராசா தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. திருக்குறளை முற்றோதல் செய்யும் ஆசிரியர் கண்ணப்பன், மாணவர் கர்னிக் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
Next Story