குமரி : மேள கலைஞர் தூக்கிட்டு தற்கொலை
Nagercoil King 24x7 |18 Jan 2025 4:05 AM GMT
கருங்கல்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மணலிக்கரையை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ஸ்ரீ ஜு ( 22). இவர் சவுண்ட் சர்வீஸ் நிலையம் மற்றும் செண்டை மேள கலைஞராகவும் இருந்து வந்தார். இவர் மனைவி மஜீசியா (19). கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 5 மாத பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோல் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து கடும் வாக்குவாதம் நடந்தது. இதற்கு இடையே வீட்டிலிருந்து வெளியே சென்ற ஸ்ரீஜுவை காணாததால் மஜிசியா தேடி பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீஜுவை மீட்டு கருங்கல் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
Next Story