அவலுார்பேட்டையில் திருவள்ளுவர் தின விழா

அவலுார்பேட்டையில் திருவள்ளுவர் தின விழா
திருவள்ளுவர் தின விழா
அவலுார்பேட்டையில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவரின் பிறந்த நாள் விழா தமிழ்ச்சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமையில் கொண்டாடப்பட்டது.செல்வராஜ், ஜெகதீஷ்குமார், ஏழுமலை, முனுசாமி, சிவகுமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் மகாராஜன் வரவேற்றார்.கடைவீதியில் திருவள்ளுவர் உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பும், திருக்குறள் ஒப்பித்த, பரதநாட்டியம் ஆடிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் முருகன், அண்ணாமலை, வெங்கடேசன், கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story