மொபட் மோதி விபத்தில் பெண் சாவு
Bhavanisagar King 24x7 |18 Jan 2025 4:24 AM GMT
மொபட் மோதி விபத்தில் பெண் சாவு
மொபட் மோதி விபத்தில் பெண் சாவு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரு டைய மனைவி வளர்மதி. (வயது 42). இவர் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் நூற்பாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். புஞ்சை புளியம்பட்டியில் உள்ள சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது அந்த வழியாகவந்தமொபட், வளர்மதி மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வளர்மதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story