அந்தரத்தில் கிழிந்து தொங்கும் சாலையோர விளம்பர பேனர்

X
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் ----- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுப்புறத்தில் தொழிற்சாலைகள் அதிகரிப்பால், இந்த சாலையில் போக்குவரத்து பல மடங்குஅதிகரித்துள்ளது. இந்நிலையில், வண்டலுார் --- வாலாஜாபாத் சாலை, ஸ்ரீபெரும்பதுார் --- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம் உள்ள கட்டடங்களின் மீதும், அருகே உள்ள இடங்களிலும் ஏராளமான விளம்பர பேனர்கள் முளைத்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும், பலத்த காற்று அடிக்கும் போது கட்டடங்களில் உள்ள இந்த பேனர்கள், சாலையில் விழுவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், ஒரகடம் அருகே காரணித்தாங்களில் கட்டடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர், காற்றில் கிழிந்து தொங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சதுடன் அப்பகுதியை கடக்கின்றனர். காற்றில் கிழந்து தொங்கும் பேனர், சாலையோரம் உள்ள மின் ஒயர் மீதும் உரசுகிறது. இதனால், பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையோரம் கிழிந்து தொங்கும் பேனரை அகற்றுவதுடன், நெடுஞ்சாலையோரம் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story

