திருவாப்பாடியில் மாட்டுவண்டி பந்தயம்!

X
மணமேல்குடி: அறந்தாங்கி அருகே திருவாப்பாடி கிராமத்தில் உழவர் தினத்தை முன்னிட்டு 70வது ஆண்டாக மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சா வூர்,மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெரிய மாடு பிரிவில் 9 வண்டிகள், நடுமாடு பிரிவில் 19 வண்டிகள், கரிச்சான் மாடு பிரிவில் 29 வண்டிகள், பூஞ்சிட்டு பிரிவில் 43 மாட்டு வண்டிகள் பங்கேற் றன. வெற்றிப்பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமை யாளர்களுக்கு ரொக்கப்பணம்,கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருவாப் பாடி கிராமத்தினர் செய்திருந்தனர்.
Next Story

