திருமயம் :லாரி மோதி அதிமுக பிரமுகர் பலி!

X
திருமயம் அருகே உள்ள வெங்களூரை சேர்ந்தவர் ஜகபர் அலி(54). அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். புதுகை மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று மதியம் காட்டுபாவா பள்ளிவாசலுக்கு பைக்கில் சென்றார். அப்போது எதிரே வந்த மினி லாரி மோதியதில் ஜகபர் அலி படுகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். இதற்கிடையே அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story

