மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி,கொடியசைத்து தொடங்கி வைத்த எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்

மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி,கொடியசைத்து தொடங்கி வைத்த எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்
X
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பொன்னேரி கிராமத்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர இன்று சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி , காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன், ஆகியோர் முன்னிலையில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ”சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ள தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடிடவும், நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பேணிக்காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்யமாட்டோம் என்றும், இவ்விளையாட்டி பங்கேற்கும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்குட்ட விளையாடுவோம் என்றும் உறுதிமொழிகிறோம்” என்று அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இப்போட்டியில் 5 மருத்துவக்குழுக்கள், 25 மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், 3 அவசர சிகிச்சை ஊர்திகள், 3 நடமாடும் சிகிச்சை ஊர்திகள், காவல் துறை சார்பில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள் உட்பட 377 காவல்துறையினர், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2 அவசர சிகிச்சை ஊர்திகள் மற்றும் 80 நபர்கள் அடங்கிய 7 மருத்துவக்குழுவினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இப்போட்டியில் சுமார் 560 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அட்மாக்குழு தலைவர்கள் பாலு, அசோக்குமார், எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ரா.பார்த்தீபன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.வீ.பழனிவேல், சேந்தமங்கலம் வட்டாட்சியர் வெங்கடேஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மா.சண்முகம், ஆகாஷ் ஜோஷி இ.காப., உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story