கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு : வாலிபர் கைது!

கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை பறிப்பு : வாலிபர் கைது!
தூத்துக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.  
தூத்துக்குடி பிரையன்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மனைவி ஸ்டெல்லா (65), அங்குள்ள முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை இவர் கோரம்பள்ளம் சென்றுவிட்டு அவ்வழியே பைக்கில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தார். மெடிக்கல் காலேஜ் அருகே வரும்போது, பைக்கில் அழைத்து வந்த அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி ஸ்டெல்லா  காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மலை பறித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து ஸ்டெல்லா தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  சப் இன்ஸ் முகிலரசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்.  அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தெர்மல் நகரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் சுதாகர் (24) என்பவரை கைது செய்து, தங்க நகையை பறிமுதல் செய்தனர். பிரபல கொள்ளையனான அவர் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story