சந்துப் பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டி

சந்துப் பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டி
குமாரபாளையத்தில் சந்துப் பொங்கல் விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அருகே  உள்ள அனைத்து பகுதியில், பொதுமக்கள் பூரண நலத்துடன் வாழவும், பிள்ளைகள் நிறைந்த கல்வி செல்வம் பெற்றிடவும், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், தொழில் வளம், விவசாய வளம் செழிக்கவும்  மார்கழி மாதத்தில் சந்து பொங்கல் விழா நடத்தபடுவது வழக்கம். தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதி சந்து பொங்கல் விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. ஜண்டை மேள ஒலிக்கு ஏற்றவாறு, அம்மன் அருள் வந்த பெண்கள் ஆடியவாறு வந்தனர். பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வைக்கபட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story