ஒட்டந்தாங்கல் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சகாயபுரம் சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், நாய்க்கன்குப்பம் கிராமத்தில் இருந்து, ஒட்டந்தாங்கல்வழியாக தென்னேரி செல்லும் சாலை உள்ளது. நாய்க்கன்குப்பம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி தென்னேரி சென்று, அங்கிருந்து சுங்குவார்சத்திரம் மற்றும்ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவருகின்றனர். இந்நிலையில், சின்னிவாக்கம் பகுதியில்இயங்கும் தனியார் கல் குவாரியில் இருந்துலோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், ஒட்டந்தாங்கல் சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இரவு, பகலாக தொடர்ந்து இயக்கப்படும் இந்த கனரக வாகனங்களால், ஒட்டந்தாங்கல், சகாயபுரம் உள்ளிட்ட கிராம சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகின்றன. இதனால், இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினசரி பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, ஒட்டந்தாங்கல், சகாயபுரம் சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, அப்பகுதியினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
Next Story