எருது விழாவில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு
Dharmapuri King 24x7 |18 Jan 2025 7:34 AM GMT
காரிமங்கலத்தில் நடைபெற்ற எருது விழாவில் மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு காரிமங்கலம் காவலர்கள் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தை அடுத்த ராமாபுரம் மண்டு பகுதியில் நேற்று முன்தினம் மாலை எருதாட்டம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது காரிமங்கலம் அருகே கெரகொடஅள்ளி கிராமத்தை சேர்ந்த சுதர்சன் வயது23 என்பவர் எருதாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, சுதர்சன் மாட்டை மற்றவர்கள் பிடித்து வரும்போது துணியை காட்டி மாட்டுடன் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாய்ந்த மாடு சுதர்சனை வயிற்றில் முட்டி தள்ளியது.இதில் அவரது வயிற்றுப் பகுதியில் குடல் சரிந்து சுதர்சன் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சுதர்சன் நேற்று மாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Next Story