தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் தேயிலை தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளனர்
Nilgiris King 24x7 |18 Jan 2025 7:35 AM GMT
தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் தேயிலை தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளனர்
மலை மாவட்டம் மன நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும் இங்கு யானை புலி கரடி சிறுத்தை மான் காற்றுப்பன்றி போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும் இந்நிலையில் சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன மேலும் வனத்தை விட்டு வெளியே வந்த காட்டெருமைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது இதனால் தேயிலை விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் இந்நிலையில் தேயிலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் உடனடியாக வனத்துறையினர் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை உடனடியாக அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது
Next Story