கோவை: ஆராய்ச்சிக்காக மூதாட்டியின் உடல் தானம் !
Coimbatore King 24x7 |18 Jan 2025 8:24 AM GMT
திராவிடர் கழகத்தில் காப்பாளராக பதவி வகித்து வந்த 96 வயதான ரங்கநாயகியின் உடல் ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கப்பட்டது.
கோவை, ஒண்டிப்புதூர் ஸ்டேன்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி (96). இவர் திராவிடர் கழகத்தில் காப்பாளராக பதவி வகித்து வந்தவர். 96 வயதான இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த பிறகு அவரது உடலை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்காக தானமாக அளிக்க ஏற்கனவே ஒப்புக் கொண்டு இருந்த நிலையில் அவரது உடலை குடும்பத்தினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.ரங்கநாயகியின் கணவர் வசந்தம் ராமச்சந்திரன் திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலைவராக இருந்ததும், அவர் உயிரிழந்த போதும் அவரது உடல் தானமாக கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Next Story