இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகத்தில்

ஜீவானந்தம் 62- ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
நாகை மாவட்டம் கீழையூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பேராசான் ப.ஜீவானந்தம் 62 -ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில குழு உறுப்பினர் டி. செல்வம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ஜீவானந்தத்தின் திருவுருவப்படத்திற்கு, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய துணைச் செயலாளர் வீ.எஸ்.மாசேத்துங், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜி.சங்கர், எஸ்.ரவி, ஏஐஒய்எஃப் ஒன்றிய தலைவர் ஆர்.கேசவன், கீழையூர் கிளைச் செயலாளர் ஆர்.மோகன்தாஸ், ஏஐடியுசி கீழையூர் யூனியன் லோடு மேன் சங்கத் தலைவர் ஆர்.செல்வம், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற ஒன்றிய அமைப்பாளர்கள் எஸ்.சந்தோஷ்கான், விஜய்ரமேஷ், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story