திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு இரண்டாவது இடம்
Tiruppur King 24x7 |18 Jan 2025 8:39 AM GMT
மாநில அளவில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு இரண்டாவது இடம்
தமிழக முழுவதும் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டில் தமிழக முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மூன்று காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதலிடம் மதுரை மாநகர் எஸ் எஸ் காலனி காவல் நிலையமும்,மூன்றாவது இடத்தை திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் பெற்றுள்ளது வருகிற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறந்த காவல் நிலையங்களுக்கு கோபி வழங்கி கௌரவிக்கிறார். திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜெகநாதன் இந்த விருதை பெற உள்ளார்.
Next Story