திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது ஆட்சியர் அறிவிப்பு

திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது ஆட்சியர் அறிவிப்பு
திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம், மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை மூலமாக பல்வே துறைகளில் முன்னேற்றமடைந்து வருகிறார்கள். இவர்களில் ஒருவருக்கு 2025-ம் ஆண்டிற்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான வருகிற ஏப்ரல் மாதம் 15 -ந்தேதி வழங்கப்பட உள்ளது. இந்த விருது ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றுடன் வழங்கப்படும். விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே வாழ்க்கையில் முன்னேறி இருக்கவேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற உதவி செய்திருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.இந்த விருது குறித்த விவரங் கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் விருதுகள் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க வருகிற பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கடைசி நாளாகும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவல கத்திற்கு கையேடாக தயார் செய்து தமிழில் அச்சிடப்பட்ட தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும். கருத்து ருக்களை மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடம், தர்மபுரி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
Next Story