திடீரென வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட மாவட்ட எஸ்பி
Dharmapuri King 24x7 |18 Jan 2025 10:27 AM GMT
லட்சுமி பகுதியில் தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் வாகனத் தணிக்கை ஆவணங்கள் இல்லாத மற்றும் தலை கவசம் அணியாத வாகனங்களுக்கு அபராதம்
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் படி தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சின்னசாமிதர்மபுரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆட்சியர் அலுவலகம், இலக்கியம்பட்டி, ஆகிய பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்டிருந்த போது திடீரென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் அதிரடியாக களத்தில் இறங்கி வாகன தணிக்கை செய்தார்கள். அப்போது, இரண்டு சக்கர வாகனங்கள் 150, நான்கு சக்கர வாகனம் 50, மூன்று சக்கர வாகனம் 10 ஆகவே பிடித்து உரிய ஆவணங்கள் இருக்கின்றதா என விசாரித்து இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணியவும், நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அட்டாயம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
Next Story