சிறுவள்ளூர் ஏரியில் குப்பை கொட்டி சீரழிப்பு

சிறுவள்ளூர் ஏரியில் குப்பை கொட்டி சீரழிப்பு
சிறுவள்ளூர் ஏரியை மாசுபடுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை
காஞ்சிபுரம் - பொன்னேரிக்கரை சாலையோரம், சிறுவள்ளூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், ஒன்றிய ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி, 75 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். ஏரிநீரை கூடுதலாக தேக்கும் வகையில், கடந்த ஆண்டு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ், ஏரி துார் வாரும் பணியை செய்து, தண்ணீரை சேமித்துள்ளனர். இந்த ஏரியை ஒட்டி இருக்கும் கரையில், மர்ம நபர்கள் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். காற்று அடிக்கும்போது, பிளாஸ்டிக் குப்பை ஏரியில் விழுந்து, ஏரிநீரை மாசுபடுத்தும் அபாயம் உள்ளது. எனவே, சிறுவள்ளூர் ஏரியை மாசுபடுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story