வாணியம்பாடி அருகே சாலை மறியல்

வாணியம்பாடி அருகே விசிகாவினர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே அம்பேத்கர் புகைப்படத்தின் மீது அவமதிப்பு செய்து, புகைப்படம் பொருந்திய பீடத்தை அவமதிப்பு செய்த நபர்களை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.. 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு. தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் விசிகவினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பு . அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்த நபர்களை தேடும் பணியில், காவல்துறையினர் தீவிரம் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி ஊராட்சியில் அம்பேத்கர் இளைஞர் நற்பணிமன்றம் சார்பில் அம்பேத்கர் புகைப்படம் பொருந்திய பீடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ளதால், அதே பகுதியை சேர்ந்த சிலர் வேகத்தடை அமைத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த மாற்று சமூகத்தினர், இங்கு வேகத்தடை அமைக்ககூடாது என அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்து, அம்பேத்கர் பீடத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகின்றது இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நெக்குந்தி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.. இதனால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு , அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்தவர் மீது உரிய நடவடிக்கை என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச்சென்றனர்.. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. அதனை தொடர்ந்து அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்த மாற்று சமூகத்தை செய்தவர்களின் பெற்றோர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககூடாது என அவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது, மேலும் நெக்குந்தி பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, . அதனை தொடர்ந்து, காவல்துறையினர் அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க தாமதம் செய்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம் பிரகாஷ் தலைமையிலான விசிகவினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.. அதனை தொடர்ந்து அம்பேத்கர் படத்தை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
Next Story