ஜெயங்கொண்டம் கடைவீதியில் கழிவுநீர் வாய்க்கால் கட்டுவதில் தாமதம். வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதி..

X
அரியலூர், ஜன.18- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலையிலிருந்து சிதம்பரம் சாலை தனியார் பெட்ரோல் பங்க்குகள் வரையிலும் சாக்கடை கால்வாய் கட்ட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது.இதில் நான்கு ரோடு முதல் சிதம்பரம் சாலை தனியார் பெட்ரோல் பங்க்குகள் வரை முதல் கட்டமாக சாக்கடை கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் கட்டி முடிக்கப்பட்ட சாக்கடை கால்வாயில் தூர் வாருவதற்காக பல இடங்களில் மூடி போடுவதற்காக இடம் விடப்பட்டது. இருப்பினும் அதில் மூடி போடாமல் திறந்த நிலையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூடியிடாத திறந்தவெளி சாக்கடை கால்வாயில் பாதசாரிகள் குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது கடைவீதி, நான்கு ரோடு வரையிலும் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகிறது. இதனால் பொங்கல் பண்டிகையின் போது கடைவீதியில் அதிக போக்குவரத்து நெரிசலும் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமலும் கடைகளுக்கு முன்பு வாகனங்கள் நிறுத்த முடியாத சூழலும் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும் தற்பொழுது சாக்கடை கால்வாய் கட்டும் பணி தாமதமாக நடைபெறுவதால் தற்பொழுது இரு புறங்களிலும் கடை வாடிக்கையாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களாலும், எதிரெதிரே வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .எனவே சாக்கடை கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் சாக்கடை தூர் வாருவதற்கான இடைவெளியில் ஸ்லாப் போட்டு மூட வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

