விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
Virudhunagar King 24x7 |18 Jan 2025 11:52 AM GMT
விருதுநகர் மாவட்டத்தில் ஜனவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் 24.01.2025 அன்று காலை 11.00 மணியளவில்; விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொள்கிறார்.
Next Story