அரியலூரில் சனிக்கிழமை பேரணியில் ஈடுபட்ட விசிகவினர்.

அரியலூரில் சனிக்கிழமை பேரணியில் ஈடுபட்ட விசிகவினர்.
X
விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்ததை தொடர்ந்து அரியலூரில் விசிகவினர் பேரணி சென்றனர்.
அரியலூர், ஜன.18 - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, அரியலூரில் அக்கட்சி சார்பில் சனிக்கிழமை பேரணி நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா தலைமையில், அரியலூர் காமராஜர் ஒற்றுமைத் திடலில் திரண்ட அக்கட்சியினர், அங்கிருந்து புறப்பட்டு, மாதாக்கோயில் சத்திரம் வழியாக பேருந்து நிலையம் வரை பேரணியாகச் சென்றனர். பேரணியின் போது, பானை சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்கள், உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அக்கட்சியின் மண்டலச் செயலர் அன்பானந்தம், மண்டல துணைச் செயலர் வெ.மாறன், அரியலூர் சட்டப் பேரவைத் தொகுதிச் செயலர் மருதவாணன்,செய்தி தொடர்பாளர் சுதாகர், மகளிரணி மாவட்டச் செயலர் இந்திராகாந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story