அரியலூரில் ஜீவா நினைவு தினம் அனுசரிப்பு

X
அரியலூர், ஜன.18 - பொதுவுடைமை போராளி ஜீவா நினைவு நாளையொட்டி, அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மாலை அணிவித்து சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.அக்கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி கலந்து கொண்டு, ஜீவா படத்துக்கு மாலை அணிவித்து, ஜீவா பொது வாழ்வு பணிகள் குறித்து பேசினார்.நிகழ்ச்சியில் அக்கட்சியின் அரியலூர் நகர கிளைத் தலைவர் ந.கோவிந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஜி.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் து.பாண்டியன், செந்துறை ஒன்றியச் செயலர் ஆலத்தியூர் சிவகுமார், நிர்வாகிகள் காசிநாதன்,இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் ந.ரெங்கநாதன்,கு.விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஜீவா படத்துக்கு மரியாதை செலுத்தினர். :
Next Story

