சேலத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகாரில் கைதான

சேலத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை புகாரில் கைதான
X
பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் பணி இடைநீக்கம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக தேவராஜன் (வயது 55) என்பவர் பணியாற்றி வந்தார். மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்துபோனார். இதனால் அவரது மகள் தனக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து கண்காணிப்பாளர் தேவராஜனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், செல்போனில் தேவராஜன் பேசியதை பதிவு செய்தார். இதையடுத்து அந்த ஆடியோ ஆதாரத்துடன் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் தேவராஜன், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததாக கூறி அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தேவராஜன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், நேற்று அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து சேலம் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் குருராஜன் உத்தரவிட்டார்.
Next Story