வலுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள்
வலுக்கு மரம் ஏறும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் நகர் 15 வது வார்டு ஆலம்பாடி சாலை புதிய காலனி பகுதியில் "ரெயின்போ இளைஞர்கள் நற்பணி மன்றத்தின்" சார்பில் 19 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டி இன்று நடைபெற்றது 30 அடி உயரம் கொண்ட கீரிஸ்,மைதா,கடுக போன்ற வலுக்கும் பொருட்கள் தடவிய பரிசு தொகுப்புகள் அடங்கிய கம்பத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு வலுக்கு மரம் ஏறினர். மரம் ஏறுபவர்கள் தண்ணீர் அடிக்கப்படும் அதையும் தாண்டி ஏறி பரிசு பொருட்களை எடுப்பவர்களே வெற்றியாளர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேற்பட்ட இப்போட்டியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதி வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு பாடுகளும் தெரிவித்தனர் நிகழ்ச்சியை அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
Next Story






