ஒசூா் நகரில் சுற்றித் திரியும் சிங்கவால் குரங்கைப் பிடிக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூா் மா நகரில் சிங்கவால் குரங்கு சுற்றித் திரிந்து வருகின்றன.வனக்கோட்டத்தில் வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயத்தில் வன விலங்குகள் பறவைகள், குரங்குகள் உள்ளன. இந்த நிலையில் வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி ஒசூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்திற்குள் நேற்று வால்பாறை சிங்கவால் குரங்கு ஒன்று வழித்தவறி வந்துள்ளது. அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அந்த குரங்கிற்கு உணவுகளை வழங்கினா். தெருநாய்களால் குரங்கிற்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அதை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத் துறையினருக்கு வன உயிரின ஆா்வலா்களின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story

