தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நெல் விவசாயம் மற்றும், மா விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனை. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு முற்றிலும் இல்லாத நிலையில் பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் நீடித்தது. இந்த நிலையில் இன்று பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவதானப்பட்டி, காட்ரோடு, கெங்குவார்பட்டி சில்வார்பட்டி, மேல்மங்கலம், தேமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4,மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. காலை 6:00 மணி முதல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதோடு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொதுவாக மழை பெய்தால் விவசாயிகள் மகிழ்ச்சி என்ற சூழ்நிலையில் தை மாதத்தில் பெய்யும் மழையால் விவசாயத்தை பாதிக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர். அதிலும் தற்பொழுது பெரியகுளம் பகுதியில் அறுவடைக்கு 10 முதல் 15 நாட்கள் இருக்கும் நிலையில் மழை பெய்வதால் நெல் விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் தை மாத பனிப்பொழிவில் பெரியகுளம் பகுதியில் மாம்பூக்கள் பூக்கும் தருவாயில் மழை பெய்வதால் பூக்கத் துவங்கி உள்ள மாம்பூக்களும் அழுகும் நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் தை மாதத்தில் மழை பெய்தாலே விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story



