ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது

தருமபுரி A.ரெட்டிஹள்ளி எம்.ஜி.ஆர். காம்லக்ஸ் அருகில் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது சட்ட விரோதமாக ரேசன் அரிசியை EICHER வாகனத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தியவர்கள் கைது
கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் டாக்டர் L.பாலாஜி சரவணன் ஆலோசனையில் சேலம் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் R.வடிவேல் தலைமையில் கிருஷ்ணகிரி சிறப்பு சுற்று காவல் படை காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் பறக்கும் படை துணை வட்டாட்சியர் பிரபு, ஆகியோர் தருமபுரி மாவட்டம் சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை தருமபுரி A.ரெட்டிஹள்ளி எம்.ஜி.ஆர். காம்ளக்ஸ் அருகில் நேற்று மாலை வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது சேலம் பக்கமிருந்த கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு சென்ற Eicher வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 14 டன் 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து உரிமையாளர் அப்துல் சையத் மெளலா, டிரைவர் மணிவண்ணன் உரிமையாளரை கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் அவர்களால் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார். பின்பு கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் ராஜசேகரன் அவர்கள் எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story