திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் ஆம்லன்ஸ் அவதி

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் வரிசை கட்டி நிற்கும் இருசக்கர வாகனங்கள்! நடுவழியில் நின்ற கார்! மருத்துவமனையை அலறவிட்ட ஆம்புலன்ஸ் சத்தம்! திருப்பத்தூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்ந்தும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையில் தினம் தோறும் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தாங்கள் கொண்டு வரும் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றி வரும் 108 ஆம்புலன்ஸிக்கும் வழி இல்லாமல் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று மருத்துவமனைக்கு தங்களது உறவினரை அழைத்து வந்த நபர் ஒருவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நடுவழியில் காரை நிறுத்திவிட்டு சென்றதால் ஆம்புலன்ஸ் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளானது இதன் காரணமாக ஆம்புலன்ஸ் டிரைவர் ஆம்புலன்ஸ் இன் ஹாரனை அடித்தும் சாய்ரன் போட்டோ அதிக சத்தத்தை எழுப்பினார் இதன் காரணமாக காரின் உரிமையாளர் சிறிது நேரம் கழித்து வந்து காரை எடுத்து ஆமன்ஸ்க்கு வழி விடும் நிலைமை ஏற்பட்டது. பார்கிங் வசதி இல்லாத நிலையில் மருத்துவமனை நுழைவு பகுதியில் உள்ள காலி இடத்தில் அழகுக்காக பார்க் கட்டியுள்ளனர் அந்த இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது…
Next Story

