திருப்பத்தூரில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!

திருப்பத்தூரில் மீண்டும் என்னால் ஜெயிலுக்கு போக முடியாது என விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி!. போலிசார் விசாரணை.*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் மீண்டும் என்னால் ஜெயிலுக்கு போக முடியாது என விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளி!. போலிசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், தண்டபாணி கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் (45) என்பவர் நகை கடை பஜாரில் மண்ணை சலித்து நகையை பிரிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு அருகே இருந்த குடும்பத்தினரிடம் கோவிந்தராஜ் தகராறில் ஈடுபட்டு நகை கழுவ பயன்படுத்தி வந்த ஆசிட்டை ஊற்றி உள்ளார். இதனால் அவரை ஆசிட் ஊற்றிய வழக்கில் கைது செய்து இது குறித்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆசிட் ஊற்றிய குற்றத்திற்காக கோவிந்தராஜ் எம்பவருக்கு நீதி மன்றத்தின் மூலம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த நிலையில் அவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேல் வேலூர் மத்திய சிறையில் இருந்து உள்ளார். அவர்களது உறவினர்கள் போராடி ஜாமீன் பெற்று கோவிந்தராஜை கடந்த 3 மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்துள்ளனர். அன்றைய நாள் முதல் இன்று வரை நான் இருக்க மாட்டேன் இறந்து விடுவேன் என்று அவ்வப்போது கூறி வந்து உள்ளார். இதை கேட்டு கேட்டு சகித்து போன உறவினர்கள் கோவிந்தராஜ் பேசும் போது அலட்சியமாக இருந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலிசார் சந்தேக மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story