ரயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கண்டெடுப்பு -போலீஸ் விசாரணை

தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கண்டெடுப்பு
திருவள்ளூர் மாவட்டம் மணவூர்-செஞ்சிபனப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story