பரந்தூர் விமான நிலையம் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்-மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி*

X
* எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து முற்றிலும் தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார் ஒரு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை உள்ளது.... தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது,நுட்பத்துடன் கூடிய நிதிநிலை கையாளப்படுகிறது,ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சி உயரும் போது திருப்பி செலுத்தும் திறன் உயர் உயரும்,நிதிக்குழு பரிந்துரைக்கும் சதவிகிதத்தை விட குறைவாகவே கடன் வாங்கப்படுகிறது பரந்தூர் விமான நிலையம் தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும்-மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி* நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சொந்த ஊரான விருதுநகர் அருகே மல்லாங்கிணரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர்... நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக நிதி நிலை குறித்து விமர்சித்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய நிதியமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து முற்றிலும் தவறான தகவலை குறிப்பிட்டுள்ளார் ஒரு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை உள்ளது என அடிப்படை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அவர் கூறியது வேடிக்கையாக உள்ளது. பொருளாதாரம் குறித்து அடிப்படை தெரியாதவர்தான் இப்படி குற்றச்சாட்டை முன் வைக்க முடியும். இதுகுறித்து சட்டமன்றத்தில் நான் விரிவான விளக்கம் அளித்துள்ளேன் இருந்தாலும் மீண்டும் மீண்டும் மக்கள் மன்றத்தில் அவர் தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். ஒட்டு மொத்தமாக மாநிலத்தின் வளர்ச்சி உயரும் போது திருப்பி செலுத்தும் திறன் உயர் உயரும் நிதிக்குழுதான் எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது. 2021ம் ஆண்டில் 1லட்சத்து 2000 கோடியாக இருந்த பட்ஜெட் அளவு தற்போது 4 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக. உயர்ந்துள்ளது. நிதி குழு நிர்ணயம் செய்கிற அளவைவிட குறைவாகத்தான் கடன் பெறப்பட்டுள்ளது.குறிப்பாக 2021-22 நிதி ஆண்டில் 28.7 சதவீதம் கடன் பெறலாம் என நிதி குழு நிர்ணயம் செய்த நிலையில் 27.01 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது ஒவ்வொரு நிதி ஆண்டும் நிதி குழு நிர்ணயம் செய்துள்ள அளவைவிட குறைவாகவே கடன் பெற்றுள்ளோம் நிதி நிலைமையை கட்டுக்குள் வைக்க தேவையான நுட்பமான பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றியஅரசு நிதி ஒதுக்கவில்லை. ஒன்றிய அரசு பல திட்டங்களுக்கு வழங்கும் நிதியை உயர்த்தி வழங்க வில்லை, மாற்றான் தாய் மனப்பான்மை உடன் நிதி வழங்கி வருகிறது என்றார். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு தேவையான நிதி வழங்க வேண்டும் வளர்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும் என்றார்.சென்னை உள்ளிட்ட தமிழக விமான நிலையங்கள் சிறி அளவில இருப்பதாகவும் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் பயணிகள் சென்னை விமானத்தில் பயணிப்பதாகவும் இன்னும் 10 ஆண்டுகளில் இது 8 கோடியாக அதிகரிக்கும் எனவே பெரிய அளவிலான விமான நிலையம் தேவை ஏற்படுவதால் பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் எடுக்கப்படுகிறது,இது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றார். என்றார். நாளை இப்பகுதி மக்களை த.வெ.க தலைவர் விஜய் சந்திப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசியல் கட்சித்தலைவர்கள் யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம்,மக்கள் ஏதாவது குறைகள் சொன்னால் அதை நிவர்த்தி செய்ய அரசிடம் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் நடக்கும் மெட்ரோ திட்டத்துக்கு ஒன்றியஅரசு பணியை துவக்கி வைத்தது, ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை 26 ஆயிரம் ரூபாய் கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது ஒன்றிய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது பல்வேறு திட்டங்களுக்கு மாநில அரசு தனது சொந்த நிதியை பயன்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் கடன் சுமை அதிகரிக்கிறது.தென் மாநிலங்களான தமிழகம் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 15 சதவீதம் மட்டுமே நிதி பங்கீடு வழங்கியுள்ளது அதிமுக திட்டத்தை திமுக முடக்கவில்லை அதிமுக கொண்டு வந்த திட்டங்களை அவர்களது ஆட்சியில் பெரும்பாலான மக்களுக்கு வழங்காமல் நிலுவையில் வைத்துவிட்டு சென்றார்கள் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது என்றார..
Next Story

