காந்திநகரில் அரிமா சங்கத்தின் வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது*

காந்திநகரில் அரிமா சங்கத்தின் வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது*
X
காந்திநகரில் அரிமா சங்கத்தின் வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது*
அருப்புக்கோட்டை அருகே காந்திநகரில் அரிமா சங்கத்தின் வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் அரிமா சங்கத்தின் வருடாந்திர ஆய்வு கூட்டம் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அருப்புக்கோட்டை சங்க தலைவர் கிருபா ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரிமா சங்க ஆளுநர் அய்யாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய பெண்களுக்கு 500 பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது. மேலும் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அரிமா சங்க நிர்வாகிகள் அரிமா சங்கம் இதுவரை செய்துள்ள நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி பேசினர். மேலும் புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் குருசாமி, செயலாளர் ஓம் ராஜ், பொருளாளர் முத்துவேல் உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌ முன்னதாக அரிமா சங்கம் சார்பில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடையும் வழங்கப்பட்டது. மேலும் அரசு பள்ளியில் தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Next Story