திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
X
திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஏழை பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில்‌ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஏழை பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி மேற்கு பகுதியில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம் ஏற்பாட்டில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தைப்பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஏழை எளிய பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ரமேஷ் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு ஏழை பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலகணேஷ் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story