விருதுநகரில் முதல் முறையாக இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது*.

விருதுநகரில் முதல் முறையாக இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது*.
X
விருதுநகரில் முதல் முறையாக இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது*.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடும் விதமாக விருதுநகரில் முதல் முறையாக இன்னிசை கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. விருதுநகர் தனியார் பள்ளியின் பொருட்காட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் "விருந்துடன் விருதுநகர்" என்ற தலைப்பில் உணவுத் திருவிழா நடைபெற்றது. சுமார் 56 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளூர் முதல் சர்வதேச அளவிலான மிகவும் பிரபலமான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதேபோல வளரும் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் முன்னோர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கண்டு ரசித்தனர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டி முன்பாக தங்களது குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். உணவுத் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பிடித்த உணவுகளை உண்டு ரசித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். உணவுத் திருவிழா நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடையும் நிலையில் நாளையும் விடுமுறை என்பதால் நீட்டிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story