சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக்க பரிந்துரை

சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக்க பரிந்துரை
X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியை தேர்வு நிலை நகராட்சியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது
சிவகங்கை நகராட்சி 1965-ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவானது. 1984-ம் ஆண்டு 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1998-ம் ஆண்டு முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது பரப்பளவு 6.97 சதுர கி.மீ. ஆக இருந்தது. கடந்தாண்டு கணக்கெடுப் பின்படி இப்பகுதியில் 60,000 மக்கள் வசிக்கின்றனர். ஆண்டு வருவாய் ரூ.18.48 கோடியாக உள்ளது. இந்நிலையில் சிவகங்கை நகராட்சியுடன் காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள காஞ்சிரங்கால், அரசனேரி கீழமேடு, எம்.ஜி.ஆர். நகர், அசிசி நகர், அரசினிப்பட்டி, இலந்தங்குடிப்பட்டி, காமராஜர் காலனி, சஞ்சய் நகர், டி.புதூர், தென்னைவயல் ஆகிய பகுதிகள் இணைக்கப்படுகின் றன. அதேபோல் வாணியங்குடி ஊராட்சியில் உள்ள வாணியங்குடி, கீழவாணியங்குடி, மேலவாணியங்குடி, இந்திரா நகர், அண்ணாமலை நகர், கூத்தாண்டன், அழகுமெய்ஞானபுரம், ஆயுதப்படை குடியிருப்பு, குறிஞ்சி நகர், அண்ணா நகர், சீனிவாச நகர், சமத்துவபுரம், பழமலை நகர், பையூர், காட்டு குடியிருப்பு ஆகிய பகுதிகளை இணைக்க அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து நகரின் பரப்பளவு 13.72 சதுர கி. மீ. ஆக உயர்கிறது. இதனிடையே முதல்நிலை நகராட்சியாக உள்ள சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு துணைச் செயலர் ஸாஜிதா, நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
Next Story